குண்டடம் ஊராட்சிஒன்றியம் சடையபாளையம் ஊராட்சியில் (06.01.2020) அன்று சடையபாளையம் ஊராட்சி தலைவராக ப.ஈஸ்வரன் அவர்கள் பதவியேற்றார்.
திருப்பூர்மாவட்டம் குண்டடம்ஒன்றியத்தில் சடையபாளைம் ஊராட்சிதலைவர், மற்றும் வார்டுஉறுப்பினர்கள் சடையபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பதவியேற்புக்கு பின்னர் ஊராட்சிதலைவர் ப.ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்கள் முன்பு பேசும்போது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளையும், இனிவரும் நாட்களில் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றுவதாகவும்.
ஊராட்சியிலுள்ள மக்கள் ஊராட்சிஅலுவலகத்தில் தன்னை எளிதாக சந்திக்கலாம் எனவும், சடையபாளையம் ஊராட்சிக்கு சிறந்த தலைவராக பணிசெய்வதே என்கடமை என்று உரையை நிறைவுசெய்தார்.