வைரசால் பாதிக்கப்பட்டதில், 91 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். மீதமுள்ள 19 பேர் இவர்களுடனான தொடர்பில் இருந்தவர்கள்.
அரசுக்கு கூடுதல் அதிகாரம்!
கேரளாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, 'கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் - 2020' என்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த, அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும், புதிய சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நேற்று மாலை (25ம் தேதி) அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
பொதுமக்களும், தனித்த குழுக்களும், தனி நபர்களும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த, அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டம் வழங்கும்.
2 ஆண்டுகள் சிறை
விதி மீறுபவர்கள் மீது, போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும். இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையோ, 10 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும். பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.