இட்லி, சாம்பார், முட்டை, பழரசம்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு

சென்னை: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களும், அறிகுறியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. உடலில் , நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வகையிலான உணவை வழங்கும் வேண்டும் என்ற ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.