ரேபிட் டெஸ்ட் கருவி : தனியார் நிறுவனத்துடன் சென்னை ஐஐடி முயற்சி

சென்னை: கொரோனா வைரசை கண்டு பிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கருவியை சென்னை ஐஐடி தனியார் நிறுவனத்துடன் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மேலும் கொரோனா தொற்று குறித்து ஒருவரின் உடலில் எதிர்ப்பு சக்தியை கண்டுபிடிக்கும் கருவியான ரேபிட்கிட் களை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. அந்த கருவி சரியான முடிவுகளை காண்பிக்காததால் இந்திய மருத்துவ கவுன்சில் அதனை பயன்படுத்த வேண்டாம் என கூறியது. தொடர்ந்து ரேபிட் கிட்களை கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை ஐஐடி நிறுவனம் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கேப்ஜெமினி என்னும் நிறுவனத்துடன் இணைந்து ரேபிட்டெஸ்ட் கிட்-களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.