தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

 போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 

போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை 

 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் தலைமையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


 போதை பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக, அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் 11.8.2022 அன்று உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி, கல்லுாரி அருகில் உள்ள பகுதிகளில், சட்டவிரோத போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இளம் தலைமுறையினர் போதை பழக்கத்தில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை அந்த பழக்கங்களில் இருந்து மீட்கவும், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 இதன்படி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.போதை குறித்த விழிப்புணர்வினை மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் விளக்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் கருப்பையா இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.